தீ பற்றி எரியும் முதல்வர் எடப்பாடி வீடு..பதற்றத்தில் கட்சி நிர்வாகிகள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கொடநாடு இல்லத்தில் நடைபெற்ற கொள்ளை, கொலை குறித்து புலனாய்வு வீடியோ ஒன்றினை புலனாய்வு பத்திரிக்கை ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் வெளியிட்டுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தின் போது காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விவரங்களும், அந்த காணொலியில் இடம்பெற்றுள்ளன.

மேலும், கோடநாடு எஸ்டேட்டில், 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நகை, பணம் இருந்ததாகவும், அதிமுகவின் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவரிடமும் வாங்கப்பட்ட மன்னிப்பு கடிதங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடநாட்டில் கொள்ளை நடந்த போது அதில் ஈடுபட்ட கனகராஜ் யாருக்காக இதை செய்தார்? என்றும், இந்த கொள்ளை சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சாமுவேல் மேத்யூஸ் தனது ஆவணப் படத்தில் காட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து எதிர்கட்சியினரின் மொத்த பார்வையும் முதல்வர் எடப்பாடி மீது விழுந்துள்ளது. உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்படி பல்வேறு விதமான சர்ச்சைகளை முதல்வர் எடப்பாடி எதிர்கொண்டு வரும் நிலையில், இன்று அவரது வீட்டில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சேலம் வீட்டின் முன்பு உள்ள பகுதியில் திடீரென தீப்பற்றியது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சேலம் சென்றுள்ளார். சேலம் மாநகரில், நெடுஞ்சாலை இல்லத்தில் தற்போது பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் மதியம் சுமார் ஒரு மணியளவில், அவரது இல்லம் அருகில் உள்ள காலி நிலத்தில் திடீரென தீப்பற்றியது.

சம்பவம் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையைச் சேர்ந்த வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.